சாலை விபத்தில் இறந்த காவலர் சுபபிரியா 
தற்போதைய செய்திகள்

பேராவூரணி அருகே ஆயுதப்படை பெண் காவலர் சாலை விபத்தில் பலி

தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த சுபபிரியா (23) பேராவூரணி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.

DIN

பேராவூரணி: தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்த சுபபிரியா (23) பேராவூரணி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் பலியானார்.

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம் பெரியநாயகிபுரம் கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல். இவரது மகள் சுபபிரியா, தஞ்சாவூர் மாவட்ட ஆயுதப்படையில் பெண் காவலராக பணிபுரிந்து வந்தார். இவர் பேராவூரணி அருகே ரெட்டவயல் கண்ணமுடையார் கோயில் திருவிழா பாதுகாப்பிற்காக சென்றவர், புதன்கிழமை மாலை பணி முடிந்து ஓய்விற்காக திருமண மண்டபத்திற்கு பெண் காவலர்களுடன் ரெட்டவயல் சாலையில் நடந்து சென்றுகொண்டிருந்த போது, பின்பக்கமாக மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓட்டி வந்த சின்ன ரெட்டவயல் கிராமத்தை சேர்ந்த தண்டாயுதபாணி மோதியதில் கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்தார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப் பதிவு செய்து தண்டாயுதபாணி (42) கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் - வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!

சிபு சோரன் மறைவு: மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு

வின்ஃபாஸ்ட் ஆலையை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

வங்க மொழியை வங்கதேச மொழி எனக் குறிப்பிடுவதா? முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் சிபு சோரன் காலமானார்

SCROLL FOR NEXT