தீப்பிடித்த கார் DIN
தற்போதைய செய்திகள்

திடீரென தீப்பிடித்த கார்! நல்வாய்ப்பாக உயிர்தப்பிய 3 பேர்!

காரில் இருந்த 3 பேர் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.

DIN

ஆம்பூர் அருகே சாலையில் சென்றுக் கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை மடிப்பாக்கம் பகுதியை சேர்ந்த சேகர், பரமசிவன், சசிகுமார் ஆகிய மூன்று பேரும் தனது சொந்த வேலையாக சென்னையில் இருந்து பெங்களூர் சென்றுக் கொண்டிருந்த போது திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மாதனூர் பொன்னகர் பகுதியில் சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சென்றுக் கொண்டிருந்தனர்.

அப்போது, காரின் இன்ஜினில் புகை வருவதை அறிந்து காரில் இருந்த மூன்று பேரும் உடனடியாக இறங்கியுள்ளனர்.

காரில் இருந்து இறங்கிய அடுத்த நொடியே திடீரென கார் தீப்பிடித்து எரிந்ததால் சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் அச்சமடைந்து ஆம்பூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் விரைந்து சென்ற ஆம்பூர் தீயணைப்புத்துறை மற்றும் கிராமிய காவல் துறையினர் எரிந்துக் கொண்டிருந்த காரை அணைக்கும் பணியில் ஈடுபட்டு தீயை அனைத்தனர்.

இருந்தபோதிலும், கார் முற்றிலுமாக எரிந்து எலும்புகூட போல காட்சியளித்தது. மேலும், காரில் பயணம் செய்த மூன்று பேரும் முன்னெச்சரிக்கையாக காரில் இருந்து இறங்கியதால் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்

இச்சம்பவம் குறித்து ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசியவாத சிந்தனையை ஏற்க வழிகாட்டும் அரசியலமைப்புச் சட்டம்! குடியரசுத் தலைவர்

காது கேட்கவில்லையா? அலட்சியம் வேண்டாம்! உங்கள் மூளையைப் பாதிக்கலாம்!!

ராய சிம்மாசனம்

பாரதிய நீதிச் சட்டம்

வணக்கம் வாரணாசி

SCROLL FOR NEXT