ஹார்ட் பீட் எக்ஸ்
தற்போதைய செய்திகள்

ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவு: அடுத்த சீசன் அறிவிப்பு!

ஹார்ட் பீட் வெப் தொடரின் முதல் பாகம் இன்றுடன் நிறைவு.

DIN

ஹாட்ஸ்டார் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவான ஹார்ட் பீட் வெப் தொடரின் முதல் பாகம் இன்றுடன்(ஆக. 23) நிறைவடைந்துள்ளது.

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று விறுவிறுப்புடனும், பொழுதுபோக்கு அம்சங்களுடனும் சென்றுக் கொண்டிருந்த ஹார்ட் பீட் வெப் தொடரின் முதல் பாகம் நிறைவடைந்துள்ளது.

இந்தத் தொடரில் நடிகை அனுமோல், தீபா பாலு, யோகலக்‌ஷ்மி, தாபா, சாருகேஷ், ராம், சபரேஷ், சர்வா, பதினே குமார், குரு லக்ஷ்மண், ஜெயராவ், கிரி துவாரகேஷ், சந்திரசேகர், தேவிஸ்ரீ, கவிதாலயா கிருஷ்ணன், தியான்ஷ், ரியா, ஸ்மைல் செல்வா மற்றும் சரவணன் ராஜவேல் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளனர்.

தீபக் சுந்தர்ராஜன் இயக்கும் இந்த வெப் தொடரை டெலி ஃபேக்ட்ரி நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த மார்ச் 8 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வந்த ஹார்ட் பீட் வெப் தொடர் இன்றுடன் நிறைவடைந்துள்ளது.

மருத்துவமனையில் மருத்துவர்கள் சந்திக்கும் சவால்கள், தாய் மற்றும் மகள் இருவருக்கும் இடையே நடக்கும் போராட்டம் உள்ளிட்டவை மையக்கருவாக வைத்து இத்தொடரின் கதை எடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் ஹார்ட் பீட் வெப் தொடர் நிறைவடைந்துள்ளதால், இத்தொடர் பார்க்கும் ரசிகர்களிடையே சற்று சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், ஹார்ட் பீட் வெப் தொடரின் அடுத்த சீசன் 2025 ஆம் ஆண்டு ஒளிபரப்பாகும் என்று தொடர் குழுவினர் அறிவித்துள்ளனர். இந்த தகவல் ஹார்ட் பீட் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

79 மீட்டா் நீள தேசியக் கொடி வரைந்த பள்ளி மாணவா்கள்

தமிழகத்தில் ஆக. 20 வரை மழை நீடிக்கும்

அவசர ஊா்தியில் கா்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தை

பெருங்கட்டூா் பள்ளி மேலாண்மைகத் குழுக் கூட்டம்

நீதித் துறை தோ்வெழுத கட்டாய 3 ஆண்டு வழக்குரைஞா் பணி: தீா்ப்பை மாற்ற உச்சநீதிமன்றம் மறுப்பு

SCROLL FOR NEXT