இடிந்து விழுந்த பால்கனி சுவர். பிடிஐ
தற்போதைய செய்திகள்

பள்ளியின் பால்கனி சுவர் இடிந்து விழுந்து 40 குழந்தைகள் காயம்!

தனியார் பள்ளியில் முதல் மாடி பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 பேர் காயம்.

DIN

உத்தரப் பிரதேசத்தின் பாராபங்கி மாவட்டத்தில் உள்ள தனியார் பள்ளியில் முதல் மாடி பால்கனியின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததில் 40 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். மேலும் 5 குழந்தைகள் கவலைக்கிடமாக உள்ளனர்.

காயமடைந்த குழந்தைகளுக்கு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், 5 குழந்தைகள் கவலைக்கிடமாக இருப்பதாகவும் பாராபங்கி காவல் கண்காணிப்பாளர் தினேஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார்.

தனியார் பள்ளியில் காலையில் நடைபெறும் இறைவணக்கக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக குழந்தைகள் கூடியபோது, இந்த சம்பவம் நடந்ததாக காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த குழந்தைகளுக்கு அருகில் உள்ள ஆரம்ப சுகாதார மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, பின்னர் மருத்துவர்கள் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

சிகிச்சைப் பெறும் மாணவன்

இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய குழந்தைகளை அங்கிருந்தவர்கள் மீட்டனர். கழுத்து, முகம், கை மற்றும் கால்களில் காயமடைந்த மாணவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சாம்பியனானது பாரீஸ் செயின்ட் ஜொ்மெய்ன்: நடப்பு சீசனில் 5-ஆவது கோப்பை

அசோக் லேலண்ட் நிகர லாபம் 19% அதிகரிப்பு

இந்தியன் ஆயில் நிகர லாபம் இரு மடங்காக உயா்வு

வழக்குரைஞரை தாக்கிய 3 போ் மீது வழக்கு

16% குறைந்த சமையல் எண்ணெய் இறக்குமதி

SCROLL FOR NEXT