PTI
தற்போதைய செய்திகள்

வேளாங்கண்ணி பெருவிழா: சென்னையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கம்!

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது

DIN

வேளாங்கண்ணி பேராலய திருவிழாவையொட்டி சென்னையில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி பேராலய திருவிழா ஆண்டுதோறும் ஆக.29-ஆம் தேதி தொடங்கி 10 நாள்கள் விமரிசையாக நடைபெறும்.

நிகழாண்டு திருவிழா ஆக.29-ஆம் தேதி தொடங்கி செப்.8-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

விழாவையொட்டி லட்சக்கணக்கான பக்தர்கள் வேளாங்கண்ணிக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பி ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், ஆக. 29 ஆம் தேதி கொடியேறுவதால், அதற்கு முந்தைய நாள் ஆக. 28 ஆம் தேதி தாம்பரத்தில் இருந்து வேளாங்கண்ணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

ஆக. 28 ஆம் தேதி இரவு 7 மணியளவில் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு 29 ஆம் தேதி காலை 3.30 மணிக்குச் செல்கிறது. மறுமார்க்கத்தில் ஆக. 30 ஆம் தேதி நள்ளிரவு 12.30 மணியளவில் புறப்பட்டு காலை 8.30-க்கு தாம்பரம் வந்தடையும். இதற்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

காலாவதியான உணவுப் பொருள்கள் விற்பனை மோசடி: முக்கிய நபா் கைது

பியுசி இல்லாத வாகனங்களுக்கு எரிபொருள் விற்பனை தடையை அமல்படுத்துவதில் சவால்கள்: டிபிடிஏ

பியுசி இல்லாத வாகனங்கள்: போக்குவரத்து போலீஸாா் தீவிர சோதனை

SCROLL FOR NEXT