முகப்பு
முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு.
தற்போதைய செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.

தற்போதைய செய்திகள்

முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் திடீர் சந்திப்பு!

முதல்வர் ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.

Updated On : 25 ஆகஸ்ட், 2024 at 8:55 AM
முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன் சந்திப்பு.
பகிர்:

முதல்வர் ஸ்டாலினை நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் இன்று சந்தித்தார்.

இது தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது:

முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் வெளியீட்டு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தேன். முன்னரே ஒப்புக்கொண்ட பணிகளால் அந்த வரலாற்றுச் சிறப்பு மிக்க விழாவில் கலந்துகொள்ள இயலவில்லை.

முதல்வர் ஸ்டாலின் - கமல்ஹாசன்

நவீனத் தமிழகத்தை நிர்மாணித்தவரும், இந்திய அரசியலில் மாபெரும் சக்தியாக விளங்கியவரும், வாழ்நாள் முழுவதையும் தமிழுக்காகவும், தமிழர் நலன்களுக்காகவும் அர்ப்பணித்த வரலாற்று நாயகருக்கு சிறப்பான முறையில் நூற்றாண்டு விழா நடத்தி, முத்தாய்ப்பாக நாணயம் வெளியாக பெருமுயற்சி எடுத்த நண்பர், தமிழ்நாட்டின் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களை இன்று அவரது இல்லத்தில் சந்தித்து பாராட்டு தெரிவித்தேன். அவரது வெளிநாட்டுப் பயணம் வெற்றி பெற வாழ்த்தினேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →