முகப்பு
தமிழ்நாடு

அதே டெய்லர், அதே வாடகை... முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த தவெக!

முதல்வர் ஸ்டாலினை விமர்சித்த தவெகவினர் குறித்து....

Updated On : 9 பிப்ரவரி, 2026 at 9:40 AM
திமுக இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின். - படம்: X/DMK IT WING
பகிர்:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் பொதுக்கூட்டங்களில் அவர் நடந்துகொள்ளும் பாணியில், கடந்த சனிக்கிழமை விருதுநகர் கல்குறிச்சி, திமுக தென் மண்டல இளைஞரணி நிர்வாகிகள் கூட்டத்துக்கு வந்த ஸ்டாலினும் நடந்துகொண்டதாக, சமூக ஊடகங்களில் விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்த நிலையில், இது குறித்து கோவை தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுக்கூட்டத்தில் தமிழக வெற்றிக் கழக துணைப் பொதுச்செயலாளர் ராஜ்மோகன் பேசியதாவது:

அதே டெய்லர், அதே வாடகை. ராம்ப் நடைபோட்டு, சிவப்பு கம்பளத்தை விரித்து, பின்னணியில் பாட்டு போட்டு, முதல்வர் மு.க. ஸ்டாலினை அழைத்து வருகிறார்கள். மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கும் சட்டை இன்னொருவருடையது.

நான் என்ன கேட்கிறேன்? ஒரு கடைக்கோடித் தொண்டன் கேட்கிறேன். அந்த பேன்ட் கலர் கூடவா மாற்றாமல் அப்படியே காப்பி அடிப்பீர்கள்?

கீழே இருந்து துண்டு எடுத்து வீசி, அந்தத் துண்டை எடுத்து போட்டுக் கொள்வதைப் பார்த்தோம். பொதுவாக நாம் நம் தளபதிக்கு மலர் கொடுப்போம் அல்லவா? அப்படி ஒரு பையன் ஓடிப் போய் பூவைக் கொடு என்று சொல்லியிருக்கிறான். அவனும் கொடுத்துவிட்டான்.

ஆனால், அந்தப் பூவை என்ன செய்வது என்று தெரியாமல், வாங்கிய பூவை அப்படியே தூக்கிப் போட்டுவிட்டுப் போகிறார். எல்லாவற்றையும் நான் மன்னித்துவிடுவேன், ஆனால் அந்த 'செல்ஃபி' எடுத்தார்களே.

சிவப்பு கம்பளத்தில் நடந்து வருபவர்கள் எல்லாம் அரசியலில் ஜெயித்துவிட முடியாது. கொஞ்சம் திரும்பிப் பாருங்கள்! மக்கள் வெள்ளத்தில் ஆண்களும் பெண்களும் புடைசூழ, ஒரு மாபெரும் திருவிழாவைப் போல, அன்புக் கடலில் மக்கள் ஆர்ப்பரித்து நிற்கிறார்கள்.

மேடையில் ஒன்றியம் முதல் மாவட்டம் வரை, மாநில அளவில் அத்தனை நிர்வாகிகளும் புடைசூழக் காத்திருக்க, மக்கள் மத்தியில் ஓங்கி ஒலிக்கிற அந்தச் சப்தத்திற்கு நடுவே, தமிழ்நாட்டின் தலையெழுத்தையே மாற்றப் போகிற என் தங்கத் தளபதி, தலைவர் நடந்து வருகிறபோது... அதைச் சொல்லும்போதே எனக்கு மெய்சிலிர்க்கிறது.

முதலமைச்சர் அண்ணனை நான் பெரிதும் மதிக்கிறேன். அவர் ஒரு மூத்த அரசியல்வாதி, அதில் மாற்றுக்கருத்து இல்லை” என்றார்.

summary

Regarding the DMDK members who are criticizing Chief Minister Stalin.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.