பலியான கார்த்திகேயன். படம்: DIN
தற்போதைய செய்திகள்

சாலையில் பள்ளம்: இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் பலி!

பள்ளம் தோண்டிய இடத்தில் முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகை, தடுப்புகள் இல்லாததால் விபத்து எனக் குற்றச்சாட்டு.

DIN

கோவை அருகே சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து இளைஞர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை பேரூர் - தொண்டாமுத்தூர் நெடுஞ்சாலையில் தீத்திபாளையம் அருகே உள்ள சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அதற்காக சாலையின் நடுவே தோண்டப்பட்ட பள்ளம் குறித்து முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகை, தடுப்புகள், வேகத்தடை போன்ற எந்த ஒரு தடுப்புகள் இல்லாமல் பணிகள் நடைபெற்று வந்து உள்ளது.

இந்நிலையில் தொண்டாமுத்தூர் அருகே தேவராயபுரத்தைச் சேர்ந்த 36 வயதுடைய கார்த்திகேயன். இவர் இருசக்கர வாகன உறுதி பாகங்கள் நிறுவனத்தில் மண்டல அலுவலராக பணியாற்றி வருகிறார்.

இவருக்கு லீலா என்ற மனைவியும், மூன்றாம் வகுப்பு படிக்கும் மகள் கயல், எல்.கே.ஜி படிக்கும் மகன் கவின் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் அலுவலக பணியாக பெங்களூருக்கு சென்று இருந்தார்.

இன்று அதிகாலை அங்கு இருந்து கோவைக்கு ரயில் மூலம் வந்து தனது இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு தொண்டாமுத்தூர் தேவராயபுரத்தில் உள்ள தனது வீட்டுக்கு சென்றபோது, பேரூர் அடுத்த தீத்திபாளையம் அருகே சாலையில் முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள், வேகத்தடை, இரும்பு தடுப்புகள் போன்ற எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் நடந்து வரும் மேம்பால பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து சாலையில் சென்றவர்கள் அளித்த தகவலின் பெயரில் பேரூர் காவல் துறையினர், அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தற்போது, நெடுஞ்சாலைத் துறையினர் அந்த சாலையில் ஜே.சி.பி இயந்திரம் கொண்டு சாலையில் மணல்களை நிரப்பி தடுப்புகளை அமைத்து வருகின்றனர். உயிரிழப்பு ஏற்படுவதற்கு முன்பே இது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொண்டு இருந்தால் விபத்து நடந்து உயிரிழப்பு தடுத்து இருக்கலாம் என நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வேதனை தெரிவித்து உள்ளனர்.

நெடுஞ்சாலைத் துறையினர் எந்த ஒரு முன்னெச்சரிக்கை அறிவிப்புப் பலகைகள், தடுப்புகள் அமைக்காமல் சாலையின் நடுவே மேம்பாலம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இளைஞர் விழுந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வத்தலகுண்டு பகுதியில் நவ. 6-இல் மின் தடை

சிவகங்கை அருகே 17-ஆம் நூற்றாண்டு கல்வெட்டுகள்

சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கிடையே கிரிக்கெட்: பதிவு செய்ய நவ.10 கடைசி

சோழீஸ்வரா் கோயில் குடமுழுக்கு: திரளானோா் தரிசனம்

தனுசுக்கு மன மகிழ்ச்சி: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT