ராஜா ராணி தொடர் பிரபலத்துக்கு பெண் குழந்தை!
நடிகை நிஹாரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நடித்த நடிகை நிஹாரிகாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி - 2 தொடரில் நடித்து பிரபலமானவர் நடிகை நிஹாரிகா. இவர் தொடர் நடிகை மட்டுமில்லை; டான்சரும்கூட.
நிஹாரிகா ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இரண்டாம் இடத்தை பிடித்தார்.
Advertisement
Advertisement
இவர் மேலும் ஜீ தமிழில் இதயத்தை திருடாதே, வித்யா நம்பர் 1, விஜய் தொலைக்காட்சியில் வேலைக்காரன் உள்ளிட்ட தொடர்களில் நடித்துள்ளார்.
இயக்குநர் ரஞ்சித்தை காதலித்து திருமணம் செய்துகொண்ட நிஹாரிகா, தான் கருவுற்று இருப்பதை முன்னதாக சமூக ஊடகங்களில் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், சின்னத்திரை நடிகை நிஹாரிகா தனக்கு ஆக. 14 ஆம் தேதி பெண் குழந்தை பிறந்ததாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ரஞ்சித் மற்றும் நிஹாரிகாவுக்கு அவர்களின் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.