எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நடிகர் ரஜினிகாந்த் குறித்து தெரிவித்துள்ளார்.
வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்று(ஆக. 25) அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களின் சந்திப்பின்போது, “மூத்த நடிகா்களெல்லாம் வயதாகி போய், பல் விழுந்து, தாடி வளா்த்து, சாகிற நிலையில் நடிப்பதால்தான் இளைஞா்களுக்கு வாய்ப்பு கிடைப்பதில்லை என்பதை மறந்துவிட்டு ஏதோ பேசுகிறார்” என்று ரஜினிகாந்த் குறித்து சில கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.
இது தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் இன்று சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுடன் பேசியபோது, அமைச்சர் துரைமுருகன் என்னுடைய நீண்ட நாள் நண்பர் எனவும், எங்கள் நட்பு தொடரும் என்று தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, இன்று வேலூர் மாவட்டம் காட்பாடியில் செய்தியாளர்களிடம் பேசி அமைச்சர் துரைமுருகன், “எங்களுடைய நகைச்சுவையை யாரும் பகைச்சுவையாக பயன்படுத்த வேண்டாம், நாங்கள் எப்போதும்போல நண்பர்களாகவே இருப்போம்” என்று அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.