முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணை: நீர்வரத்து அதிகரிப்பு!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது.

Updated On : 31 ஆகஸ்ட், 2024 at 3:56 AM
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 6,396 கன அடியாக அதிகரிப்பு
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் லேசான மழை காரணமாக சனிக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5,349 கன அடியிலிருந்து வினாடிக்கு 6,396 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து வினாடிக்கு 13,500 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Advertisement

கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 700 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 116.02 அடியிலிருந்து 115.56 அடியாக சரிந்தது. நீர் இருப்பு 86.56 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments