கனமழை எதிரொலி: எங்கெல்லாம் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை?
பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தொடர்பாக...
ஃபென்ஜால் புயல் காரணமாக பெய்த தொடர் கனமழையால், வெள்ள நீர் வடியாத பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 4) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதாக மாவட்ட ஆட்சியர் பழனி தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: அடுத்த 3 மணி நேரத்துக்கு 12 மாவட்டங்களில் மழை!
Advertisement
Advertisement
கடலூர் மாவட்டத்தில் கடலூர், பண்ருட்டி, அண்ணாகிராமம் பகுதிகளில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், புதுவையில் மழை வெள்ள பாதிப்பால், நிவாரண முகாமாக மாற்றப்பட்டுள்ள பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற அரசு மற்றும் தனியார் பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.