ரஜினி வசூலை முறியடித்த விஜய் சேதுபதி!
சீனாவில் மகாராஜா திரைப்படம்...
மகாராஜா திரைப்படம் சீனாவில் வசூலைக் குவித்து வருகிறது.
இயக்குநர் நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடித்த மகாராஜா திரைப்படம் இந்தியளவில் பெரிய வெற்றியைப் பெற்று அசத்தியது.
திரையரங்க வெளியீட்டில் ரூ.110 கோடியையும் ஓடிடியில் பரவலான கவனத்தையும் பெற்றது. முக்கியமாக, பாலிவுட்டில் ரசிகர்களிடம் அபாரமான வரவேற்புக் கிடைத்தது.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: விஜய் - 69 அப்டேட்!
சீனாவில் இப்படம் 40 ஆயிரம் திரைகளில் கடந்த வெள்ளிக்கிழமை (நவ.29) வெளியானது. அங்கு, முதல் நாள் வசூலாக ரூ.10 கோடி வரை வசூலித்ததாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், முதல் மூன்று நாள்களில் இப்படம் ரூ. 26 கோடி வரை வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், சீனாவில் நடிகர் ரஜினிகாந்த் நடித்த 2.0 வசூலைக் (ரூ.22 கோடி) கடந்த தமிழ்ப்படம் என்கிற சாதனையை மகாராஜா அடைந்துள்ளது.
படத்தின் திரைக்கதை சீன ரசிகர்களைக் கவர்ந்துள்ளதால் இப்படம் பெரிய வசூலைக் குவிக்கும் என்றே தெரிகிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.