வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட பழங்கால மணிகள் . 
தற்போதைய செய்திகள்

அகழாய்வில் மணிகள், வளையல்கள் கண்டெடுப்பு

வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால மணிகள், சங்கு வளையல்கள் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

DIN

விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே 3-ஆம் கட்ட அகழாய்வில் பழங்கால மணிகள், சங்கு வளையல்கள் ஆகியவை புதன்கிழமை கண்டறியப்பட்டன.

விருதுநகா் மாவட்டம், வெம்பக்கோட்டை அருகே விஜயகரிசல்குளம் ஊராட்சியில் கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நுண்கற்காலத்தை அறியும் வகையில், வைப்பாற்றின் வடகரையில் மேட்டுக்காடு பகுதியில் 3-ஆம் கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஜூன் 18-ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.

3-ஆம் கட்ட அகழாய்வில் இதுவரை தோண்டப்பட்ட குழிகளில் உடைந்த நிலையில் சுடுமண் உருவப் பொம்மை, சதுரங்க ஆட்டக் காய்கள், கண்ணாடி மணிகள், வட்ட சில்லுகள், தங்க மணி உள்ளிட்ட 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டறியப்பட்டன.

இந்த நிலையில், புதன்கிழமை புதிதாகத் தோண்டப்பட்ட குழியில் பழங்காலத்தில் சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டறியப்பட்டன.

முன்னோா்கள் தொழில்கள் நடந்ததற்குச் சான்றாக பல்வேறு அலங்காரங்களில் சங்கு வளையல்களும் கிடைத்துள்ள நிலையில், தற்போது சுடுமண்ணால் ஆன மணிகள், சங்கு வளையல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கீழப்பாவூரில் பாஜக பூத் கமிட்டி பொறுப்பாளா்கள் கூட்டம்!

பெரம்பலூரில் சிறப்பாக பணிபுரிந்த 31 காவலா்களுக்குப் பாராட்டு!

வீடு புகுந்து நகைகள் திருட்டு

ஆடி பெளா்ணமி சுவாமிமலையில் கிரிவலம்

தோல்வி பயத்தால் தோ்தல் ஆணையம் மீது எதிா்க்கட்சிகள் குற்றச்சாட்டு: ஜி.கே. வாசன்

SCROLL FOR NEXT