மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து சேதமடைந்த கார்.  
தற்போதைய செய்திகள்

மேம்பாலத்தின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதம்: வைரலாகும் விடியோ!

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதமடைந்தது.

DIN

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை புதிதாக கட்டப்பட்டு வரும் மேம்பாலம் பணியின்போது கான்கிரீட் பெயர்ந்து விழுந்து கார் சேதமடைந்தது.

இது தொடர்பான விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

கோவை உப்பிலிபாளையம் முதல் கோல்டுவின்ஸ் வரை சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மேம்பாலத்திற்கு கீழே சாலை போக்குவரத்து வழக்கம் போல் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், மேம்பால கட்டுமானத்தின் கான்கிரீட் பெயர்ந்து அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் மீது விழுந்தது. இதில் காரின் கண்ணாடி மற்றும் முன்புற பகுதி சேதம் அடைந்தது.

இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. கார் சேதமடைந்தது தொடர்பான விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்தியா ஒருபோதும் சமரசம் செய்யாது; விளைவுகளை சந்திக்க தயார்! மோடி மறைமுக பதிலடி!

யுபிஐ எப்போதும் இலவசமாகவே கிடைக்கும் என நான் கூறவில்லை: சஞ்சய் மல்ஹோத்ரா விளக்கம்

தங்கம் வென்றார் அன்னு ராணி!

இன்னும் நிறைய பார்க்கப் போகிறீர்கள்! இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை!

டிரம்ப் வரி எதிரொலி: இந்திய பங்குச் சந்தை கடும் சரிவு!

SCROLL FOR NEXT