தற்போதைய செய்திகள்

முதலிடத்தை பிடித்த புதிய தொடர்: இந்த வார டிஆர்பி!

தொடர்களின் இந்த வார டிஆர்பி விவரம்...

DIN

இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களைப் பார்ப்பதற்கு தனி ரசிகர்கள் உள்ளனர். தொடர்களை இல்லத்தரசிகள் மட்டுமல்லாமல், இளம் வயதினரும் விரும்பிப் பார்க்கின்றனர்.

தற்போது உள்ள சூழலில், தொடர்களை அலுவலகம் செல்வோரும் விருப்ப நேரங்களில் ஓடிடித் தளங்களில் பார்க்கின்றனர். எந்த தொடர் மக்களால் அதிகம் விரும்பி பார்க்கப்படுகிறது என்பதை டிஆர்பி பட்டியல் மூலம் தெரிந்துக் கொள்ளலாம்.

அந்த வகையில், இந்த வாரம் எந்தெந்த தொடர்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது என்பதைக் காணலாம்.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் மூன்று முடிச்சு தொடர் 10.45 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.

சிங்கப் பெண்ணே தொடர் 10.41 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று, இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது.

முதல் இடத்தில் இருந்த கயல் தொடர் 10.23 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நிறைவடைந்த சுந்தரி தொடர் 9.89 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று நான்காம் இடத்தைப் பிடித்துள்ளது. மருமகள் தொடர் இந்த வாரம் 9.16 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஐந்தாம் இடத்தைப் பிடித்துள்ளது.

இராமாயணம் தொடர் 9.11 டிஆர்பி புள்ளிகளுடன் ஆறாம் இடத்தைப் பெற்றுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடர், இந்த வாரம் 8.05 டிஆர்பி புள்ளிகளைப் பெற்று ஏழாம் இடத்தில் உள்ளது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 7.09 டிஆர்பி புள்ளிகளுடன் ஏழாவது இடத்தையும், 6.68 டிஆர்பி புள்ளிகளுடன் பாக்கியலட்சுமி தொடர் எட்டாம் இடத்தையும் பிடித்துள்ளன.

ஆஹா கல்யாணம், சின்ன மருமகள் தொடர்கள் டிஆர்பி புள்ளிகள் முறையே 6.67, 6.15 பெற்றுள்ளன.

மூன்று முடிச்சு தொடர் ஆரம்பிக்கப்பட்டு சில மாதங்களே ஆன நிலையில், முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

மேலும், சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களே முதல் 6 இடங்களைப் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

மத்திய பட்ஜெட்: ஒரு பார்வை

ராகுல் பேச்சால் மக்களவையில் கடும் அமளி: நாள் முழுவதும் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT