திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்திலுள்ள உயிரியல் பூங்காவிலிருக்கும் ஆறு வயதுடைய பெண் சிங்கத்தை காப்பாற்ற அமெரிக்காவிலிருந்து மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வளர்க்கப்பட்டு வரும் ஆறு வயதான பெண் சிங்கம் கிரேசி, கடந்த நான்கு ஆண்டுகளாக ’க்ரோனிக் அட்டோபிக் டெர்மடிட்டிஸ்’ எனும் கொடிய தோல் நோயால் அவதிப்பட்டு வருகின்றது.
கடந்த சில ஆண்டுகளாக கிரேசிக்கு கொடுக்கப்பட்டு வந்த உள்நாட்டு மருந்துகள் எதுவும் பயனளிக்காததால், சொயிட்டிஸ் எனும் சர்வதேச விலங்கு மருத்துவ நிறுவனத்தின் உதவியோடு அமெரிக்காவிலிருந்து செஃபோவேசின் எனும் நோய் எதிர்ப்பு(ஆன்டிபயாடிக்) மருந்து வரவழைக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரத்திற்கு ஒருமுறை கிரேசிக்கு இந்த மருந்து அளிக்கப்பட வேண்டும் எனவும், நான்கு வேளைகள் இந்த மருந்து அளிப்பதற்கு 15,000 ரூபாய் செலவாகின்றது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: பாபர் மசூதி இடிப்பு தினம்: அயோத்தியில் பாதுகாப்பு தீவிரம்!
வாழ்நாள் முழுவதும் குணப்படுத்த முடியாத நோயான இது, சருமத்தில் தொடர் எரிச்சலையும் அரிப்பையும் ஏற்படுத்தும் என்றும் இந்த நோய்யிற்கு தீர்வு இல்லையென்றாலும் இதன் அறிகுறிகளை மட்டும் கட்டுப்படுத்தி அது தரும் வேதனையை தீர்க்க முடியும் என்கிறார் கால்நடை மருத்துவர் நிகேஷ் கிரண்.
கிரேசி குறித்து அவர் கூறுகையில், ஆறு வயதாகும் அந்த பெண் சிங்கத்திற்கு இருக்கும் நோய் முதலில் புற்றுநோயாக இருக்குமோ என்று சந்தேகிக்கப்பட்டு பையோப்சி டெஸ்ட் எடுக்கப்பட்டதாகவும், பின்னர் அது புற்றுநோய் இல்லை என்று உறுதி செய்யப்பட்டது, பிறகு கிரேசிக்கு இருக்ககூடிய க்ரோனிக் அட்டோபிக் டெர்மடிட்டிஸ் கண்டறியப்பட்டதாக கூறினார்.
மேலும், கடந்த மூன்று வாரங்களாக கொடுக்கப்பட்டு வரும் இந்த மருந்தினால் கிரேசியின் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.