புர்கினோ ஃபசோ: மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினோ ஃபசோவின் ராணுவ அரசாங்கத்தினால் அந்நாட்டின் புதிய பிரதமர் நியமிக்கப்பட்டார்.
கடந்த வெள்ளிக்கிழமை அந்நாட்டின் ஜனாதிபதி இப்ராஹிம் தரோரின் ராணுவ அரசினால் முன்னாள் பிரதமர் டம்பேலா தலைமையிலான அரசாங்கம் கலைக்கபட்டதைத் தொடர்ந்து, புதிய பிரதமராக ரிம்டல்பா ஜீன் இம்மானுவேல் அவ்டிராகோ நியமிக்கப்பட்டார்.
இதையும் படிக்க: சிரியாவில் சர்வாதிகார ஆட்சி முடிவு: கிளர்ச்சியாளர்கள் அறிவிப்பு!
இதற்கு முன்னர் அவ்டிராகோ, கலைக்கப்பட்ட டம்பேலா அரசின் தகவல் தொடர்பு அமைச்சராகவும், அரசு செய்தி தொடர்பாளராகவும் பணியாற்றினார்.
இதுவரை டம்பேலா அரசு கலைக்கப்பட்டதிற்கான காரணம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியிடப்படாத நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு தற்போதைய ஜனாதிபதி இப்ராஹிம் தரோர் தலைமையிலான ராணுவம் அரசாங்கத்தை கைப்பற்றியவுடன் டம்பேலா பிரதமராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.