விஜய் மீது எந்த சங்கடமும் இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது எவ்வித சங்கடமும் இல்லை. அவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் பங்கேற்றது மிக்க மகிழ்ச்சி. சூதாட்டத்தை ஆட விரும்புவோர் அரசியல் களத்தில் கலவரத்தை, குழப்பத்தை ஏற்படுத்துவர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சி குறிவைக்கப்படுகிறது என்பதைவிட திமுக கூட்டணி குறிவைக்கப்படுகிறது என்றே சொல்ல வேண்டும்.
திமுக அழுத்தம் தருகிறது என்றால், முன்னதாகவே விழாவில் பங்கேற்க மாட்டேன் என சொல்லி இருப்பேன். விழாவில் பங்கேற்காதது, நான் சுயமாக எடுத்த முடிவு.
இதையும் படிக்க: சொல்லப் போனால்... அடுத்தது அரிட்டாபட்டி டங்ஸ்டன் சுரங்கம்!
ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் கட்சியின் நலனுக்கு எதிராக இருப்பதாக நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். ஆலோசித்து முடிவெடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
”அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில்கூட கலந்துகொள்ள முடியாத அளவிற்கு கூட்டணிக் கட்சிகளால் அவருக்கு எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிகிறது” என்று தவெக தலைவர் விஜய் பேசியிருந்த நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவனால் விளக்கம் அளித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.