கோப்புப்படம்
தற்போதைய செய்திகள்

சிறுவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது!

தாணேவில் சிறுவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதைப் பற்றி..

DIN

தாணே: மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த குழந்தைகளுக்கான பயிற்சி மையத்தில் சிறுவர்களிடம் அத்துமீறிய ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகாராஷ்டிர மாநிலம் தாணேவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த குழந்தைகளுக்காக பயிற்சி மையம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு பணிப்புரிந்து வந்த 35 வயதுடைய ஆண் ஆசிரியர் ஒருவர் அங்கு பயிலும் 9 முதல் 15 வயதுடைய மூன்று சிறுவர்களைத் தனக்கு மசாஜ் செய்யுமாறு கட்டாயப்படுத்தியதுடன் அவர்களிடம் பாலியல் சீண்டல்களில் ஈடுப்பட்டுள்ளார். மேலும், இந்தச் செயல்களை அவர் தனது செல்போனில் விடியோ பதிவும் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மூன்று சிறுவர்களும் கடந்த செப்டம்பர் மாதத்திலிருந்து வகுப்பிற்கு வராமலிருந்தனர். மேலும், அதில் ஒரு சிறுவன் ஆசிரியர் தங்களிடம் நடந்துகொண்டதைப் பற்றி தனது குடும்பத்தினரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, கடந்த வெள்ளிக்கிழமை அந்தக் கல்வி நிறுவனம் சார்பில் புகாரளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அந்த ஆசிரியர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

மேலும், அந்த ஆசிரியரின் மீது போக்ஸோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டதுடன். அவரின் செல்போன் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைப்பெற்றுவருவதாக ஆம்பர்நாத் காவல்துறை அதிகாரி பாலாஜி பந்தாரே தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பத்துக்கும் மேற்பட்ட யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து மளிகை கடை வீடுகளை இடித்து அட்டகாசம்

ஆணவக்கொலைக்கு எதிராக தனிச் சட்டம் வருமா? முதல்வர்தான் சொல்லணும் என துரைமுருகன் பதில்

நடிகர் மதன் பாப் காலமானார்

பத்த வச்சுட்டியே பரட்டை... கூலி டிரைலர் இறுதியில் காக்கா சப்தம்!

மனைவி தனது காதலனுடன் பழகி வந்ததாக சந்தேகப்பட்ட கணவன் இரு குழந்தைகளுடன் தற்கொலை!

SCROLL FOR NEXT