சென்னையில் போக்குவரத்து நெரிசல். 
தற்போதைய செய்திகள்

கனமழையால் ஸ்தம்பித்த சென்னை! நெரிசலில் சிக்கிய வாகனங்கள்!

சென்னையில் போக்குவரத்து நெரிசல் தொடர்பாக...

DIN

சென்னையில் பெய்த கனமழையால் போரூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. நெரிசலில் வாகனங்கள் சிக்கியது.

வங்கக்கடலில் உருவாக்கியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக, சென்னை புறநகர்ப் பகுதிகளில் காலை முதல் விட்டு விட்டு பரவலாக மழை பெய்து வருகிறது.

இதனால் கோயம்பேடு, போரூர் மேம்பாலம் , நான்கு ரோடு சந்திப்பு முழுவதிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

குறிப்பாக, ஐயப்பன்தாங்கலில் இருந்து ராமாபுரம் செல்லக்கூடிய சாலை, போரூர் மேம்பாலம் மீதும், போரூரில் இருந்து வளசரவாக்கம், வடபழனி, கோயம்பேடு ஆகிய செல்லக்கூடிய ஆற்காடு சாலையிலும், போரூரில் இருந்து குன்றத்தூர் செல்லக்கூடிய சாலை என அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து கடுமையாக முடங்கியது.

மெட்ரோ இரண்டாம் கட்ட பாலப் பணிகளாலும், போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால், அப்பணிகளை விரைந்து முடித்து சாலைகளை சீரமைத்து, போக்குவரத்தை சீர் செய்ய வேண்டும் என்று வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதேபோல், சென்னையின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது வாகன ஓட்டிகள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்டிஐமைண்ட்ட்ரீ 3வது காலாண்டு நிகர லாபம் 10.5% சரிவு!

நிலவின் தென்துருவத்தில் தடம் பதித்த ஒரே நாடு இந்தியா: இஸ்ரோ தலைவர் பெருமிதம்

அமெரிக்காவில் பனிப்புயலால் கடும் பாதிப்பு: ஒரேநாளில் 10,000 விமானங்கள் ரத்து!

கலைத்துறையை மேம்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்: ராஜா ஸ்தபதி!

கராத்தே பாபு டீசர்!

SCROLL FOR NEXT