முகப்பு
தற்போதைய செய்திகள்

கடைசி மழைமேகங்கள்... சென்னைக்கு இன்றிரவோடு மழைக்கு ரெஸ்ட்!

சென்னையில் பெய்யும் மழை தொடர்பாக...

Updated On : 12 டிசம்பர், 2024 at 12:26 PM
மழை (கோப்புப்படம்)
பகிர்:

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம் என்று தமிழ்நாடு வெதர்மென் தெரிவித்துள்ளார்.

வானிலை நிலவரங்களை அவ்வபோது வெளியிடும் தமிழ்நாடு வெதர்மென் என்றழைக்கப்படும் பிரதீப் ஜான் கூறுகையில், ”ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வால், சென்னையை நோக்கி வரும் மழை மேகங்களால் பெய்யும் கடைசி சுற்று மழை தற்போது பெய்யும் மழையாக இருக்கலாம்.

இன்றிரவு(டிச. 12) மற்றும் நாளை காலைக்குள் மழை முற்றிலும் நின்றுவிடும்” என்று தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று காலை தொடங்கிய மழை இடைவெளி விட்டு விட்டு மிதமான மழை முதல் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்து வருகிறது. சென்னை மட்டுமில்லாமல் அதன் புறநகர்ப் பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, அடுத்த 12 மணி நேரத்தில் வலுக்குறைந்து தென்தமிழகப் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக நிலவக்கூடும் என்பதால் தென்தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →