முதல்வர் மு.க.ஸ்டாலின்  
தற்போதைய செய்திகள்

திண்டுக்கல் மருத்துவமனை தீவிபத்து: தலா ரூ. 3 லட்சம் உதவி

திண்டுக்கல் மருத்துவமனை தீவிபத்தில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 3 லட்சம் உதவி அறிவிப்பு

DIN

திண்டுக்கல் தனியார் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

திண்டுக்கல் மாவட்டம், திண்டுக்கல் மாநகராட்சிப் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் வியாழக்கிழமை (டிச.12) இரவு 9.30 மணியளவில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் தாடிக்கொம்பு, பாலதிருப்பதி நகரைச் சேர்ந்த மணிமுருகன் (30), மாரியம்மாள் (50) , தேனி மாவட்டம் சீலம்பட்டி அம்பேத்கர் காலனியைச் சேர்ந்த சுருளி (50), சுப்புலட்சுமி (45), திண்டுக்கல் என்.ஜி.ஓ. காலனியைச் சேர்ந்த ராஜசேகர் (36), செல்வி.கோபிகா (6) ஆகியோர் உயிரிழந்தனர் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமும் வேதனையும் அடைந்தேன்.

மேலும் இந்த விபத்தில் பலத்த காயமடைந்தவர்கள் அருகிலுள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்.

இந்த தீ விபத்தில் உயிரிழந்த ஆறு நபர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதுடன் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.3 லட்சம், பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.1 லட்சம், இலேசான காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கிட உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: கமருதீனை விட்டு விலகுகிறேன்: விஜே பார்வதி

தந்தை அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிவிட்டேன்: முதல்வர் ஸ்டாலின்

எங்கேயும் எப்போதும்... சான்வி மேக்னா!

தகனம் செய்ய கொண்டுவரப்பட்ட பெண் உயிர் பிழைத்த அதிசயம்!

பள்ளி வாகனம் - கார் நேருக்குநேர் மோதி விபத்து! 5 குழந்தைகள் கவலைக்கிடம்!

SCROLL FOR NEXT