செம்பரம்பாக்கம்  ஏரியில் இருந்து  திறந்து விடப்பட்ட உபரி நீா். 
தற்போதைய செய்திகள்

செம்பரம்பாக்கம், புழல் ஏரியில் உபரிநீர் திறப்பு: முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை

செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகளிலிருந்துஉபரி நீர் திறக்கப்படுவதால் வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

DIN

காஞ்சிபுரம்: கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீா் வழங்கும் செம்பரம்பாக்கம், புழல் ஆகிய ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதை அடுத்து உபநீர் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வானப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். வியாழக்கிழமை (டிச.12) நீர் இருப்பு 21.90 அடியாகவும், கொள்ளளவு 3,110 மில்லியன் கன அடியாகவும் இருந்த நிலையில், தற்போது ஏரிக்கு நீர் வரத்து 6,500 கன அடியாகவும், நீர்மட்டம் 23.29 அடியாக உயர்ந்துள்ளது.

தற்போது ஏரிக்கு வரும் நீர் வரத்தினால் 22 அடியை எட்டுவதாலும், ஏரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் அவ்வப்போது விட்டு விட்டு மழை பெய்து வருவதால் வெள்ளநீர் வரத்து காரணமாக, செம்பரம்பாக்கம் ஏரியின் நீர் மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, வெள்ளிக்கிழமை காலை (டிச.13) 8 மணியளவில் வினாடிக்கு வெள்ளநீர் போக்கி வழியாக 1000 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

எனவே, ஏரியிலிருந்து மிகை நீர் வெளியேறும் வாய்க்கால் செல்லும் கிராமங்களான சிறுகளத்தூர், காவனூர், குன்றத்தூர், திருமுடிவாக்கம், வழுதியம்பேடு, திருநீர்மலை மற்றும் அடையாறு ஆற்றின் கரையின் இரு புறமும் உள்ள தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு முதற்கட்ட வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று 21.20 அடி உயரம் கொண்ட புழல் ஏரி முழுக்கொள்ளளவை எட்டியதை அடுத்து அணையின் பாதுகாப்பு கருதி வெள்ளிக்கிழமை காலை 6.30 மணியளவில் 500 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது.

மேலும், சோழவரம் ஏரியில் 6.43 அடியும், கண்ணன்கோட்டை - தோ்வாய் கண்டிகை ஏரியில் 31.03 அடியும் நீா் இருப்பு உள்ளது. இந்த ஏரிகளில் தற்போது 9,168 மில்லியன் கனஅடி நீா் இருப்பு உள்ளது.

செல்வப் பெருந்தகை ஆய்வு

மேலும் நீர் இருப்பு நீர் வெளியேற்றும் பணிகளை ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினர் செல்வப்பெருந்தகை மற்றும் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் படப்பை மனோகரன் உள்ளிட்டோர் நேரில் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

கரையோர மக்களுக்கு உரிய முறையில் நீர் வெளியேற்றம் குறித்த தகவல்களை தருமாறு கேட்டுக் கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விழியிரண்டும்... ராஷி சிங்!

ம.பி: கோயிலில் கூட்டநெரிசல்! 2 பெண் பக்தர்கள் பலி... 5 பேர் படுகாயம்!

ஆயிரம் ஃபாலோயர்ஸ் இல்லாதவர்களுக்கு நேரலை கிடையாது: இன்ஸ்டாகிராம் புதிய விதி!

கருவிழிகள் பேசுதே... ஜன்னத் ஜுபைர்!

இயக்குநர்களின் பாராட்டில் பரிதாபங்கள் விடியோ! குவியும் வாழ்த்துகள்!

SCROLL FOR NEXT