முல்லைப் பெரியாறு அணை (கோப்புப்படம்). 
தற்போதைய செய்திகள்

முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணி: கேரள அரசு அனுமதி!

கட்டுமானப் பொருள்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி.

DIN

தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பராமரிப்புப் பணிகளுக்காக  கட்டுமானப் பொருள்களை எடுத்து செல்ல கேரள அரசின் வனத்துறை அனுமதி  அளித்துள்ளதாக தேனி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக தமிழக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டம் முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ள, வாகனங்கள் மூலம்  கட்டுமானப் பொருள்களை எடுத்து செல்ல கேரள வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது. 

தேனி, திண்டுக்கல், மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களின் குடிநீர், பாசன ஆதாரமாகத் திகழும் முல்லைப்பெரியாறு அணை தமிழக-கேரள எல்லையில் அமைந்துள்ளது.

தமிழ்நாடு அரசு பொதுப்பணித்துறையின் சார்பில், முல்லைப்பெரியாறு அணைப்பகுதியில் ஆண்டுதோறும் மராமத்துப் பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம்.

இந்நிலையில் பொதுப்பணித்துறையின் சார்பில் கடந்த                    டிசம்பர் 4-ஆம் தேதி, தேனியிலிருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருள்களை ஏற்றிக் கொண்டு, இடுக்கி மாவட்டம், குமுளி வட்டம் வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்குக் கொண்டு சென்றனர். 

சோதனைச் சாவடியில் முல்லைப் பெரியாறு அணைக்குப் பொருள்கள் எடுத்துச் செல்ல கேரள வனத்துறையினரிடம் உரிய அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது. 

அதனைத் தொடர்ந்து, தேனி மாவட்ட ஆட்சியரால், தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச்செயலாளர் (நீர்வளத்துறை) அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, கேரள அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச் சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்கு தளம் வழியாக முல்லை பெரியாறு அணைப் பகுதிக்குக் கட்டுமான பொருள்களைக் கொண்டு செல்வதற்கு அனுமதி பெறப்பட்டுள்ளது என தேனி மாவட்ட ஆட்சியர் ஆர்.வி. ஷஜீவனா தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 3

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 2

நவம்பர் மாத எண்கணித பலன்கள் - 1

அவமதிப்பு, புறக்கணிப்பு, வலிகளை எல்லாம் கடந்து சாதனை புரிந்த இந்திய மகளிர் கிரிக்கெட் அணி!

செப்டம்பர் நினைவுகள்... மாளவிகா மேனன்!

SCROLL FOR NEXT