தற்போதைய செய்திகள்

கொள்ளிட ஆற்றங் கரையோரங்களில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

கொள்ளிடம் ஆற்றங் கரையோரங்களில் வசிப்போா் பாதுகாப்பாக இருக்குமாறு கீழணை கொள்ளிடம் வடி நிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

DIN

சிதம்பரம்: கொள்ளிடம் ஆற்றங் கரையோரங்களில் வசிப்போா் பாதுகாப்பாக இருக்குமாறு கீழணை கொள்ளிடம் வடி நிலக்கோட்ட உதவி செயற்பொறியாளர் கொளஞ்சிநாதன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

மேட்டூர் அணையின் நீர்மட்டம் வெள்ளிக்கிழமை மாலை(டிச.13) 8 மணியளவில் 117.57 அடியை எட்டியுள்ளது. அணைக்கு வரும் நீர்வரத்து அதிகப்படியாக உள்ளதால் அணைக்கு வரும் உபரிநீர் மற்றும் அதற்கு கீழ்பகுதியில் உள்ள கிளை ஆறுகளில் இருந்து வரும் உபரிநீர் முழுவதும் காவிரி ஆற்றில் சுமார் 35,000 கன அடி அளவுக்கு திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து அதிகரிக்கும் நிலையும் உள்ளது.

இதனால் காவிரியில் திறந்துவிடப்பட்ட உபரிநீர் 18,000 கன அடிக்கு அதிகப்படியான வெள்ள உபரிநீர் கொள்ளிடம் ஆற்றில் திறந்துவிடப்படுவதாலும் மேலும், இது படிப்படியாக நீர்வரத்துக்கு ஏற்ப சுமார் 60,000 கனஅடி வரை உயர்த்தப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, கொள்ளிட கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிகமாக இருப்பதால் ஆற்றில் குளிக்கவோ, நீந்தவோ, துணி துவைக்கவோ, மீன்பிடிக்கவோ, பொழுது போக்கவோ மற்றும் கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும், பாதுகாப்பற்ற கரையோரப் பகுதிகளில் நின்றுகொண்டு பொதுமக்கள் ‘செல்பி’ எடுப்பதைத் தவிா்க்க வேண்டும். ஆறு, கால்வாய்களில் அதிகளவு நீா் வரும் பகுதிகளுக்கு தங்கள் குழந்தைகளை விளையாடச் செல்லவிடாமல் பெற்றோா் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும் என அவர் கூறியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கடையநல்லூா், வீரகேரளம்புதூா் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர கால அவகாசம் நீட்டிப்பு

அரசு மருத்துவமனைகளில் வலிமையான குடும்ப இயக்கம் திட்ட முகாம் தொடக்கம்

தென்காசியில் மகளிா் குழுவினருக்கு ரூ. 55.44 கோடி நலத்திட்ட உதவிகள்

பெரியாா் எங்கும், என்றும் நிலைத்திருப்பாா்: முதல்வா்

வரி ஏய்ப்பு புகாா்: நகைக் கடையில் வருமான வரித் துறை சோதனை

SCROLL FOR NEXT