கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

பூமியை நோக்கி வரும் 2 சிறுகோள்கள்: நாசா எச்சரிக்கை!

பூமியை நோக்கி இரண்டு சிறுகோள்கள் வந்து கொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளதைப் பற்றி..

DIN

பூமியை நோக்கி இரண்டு பெரிய ஆஸ்டிராய்டு எனப்படும் சிறுகோள்கள் வந்துகொண்டிருப்பதாக நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா இரண்டு பெரிய சிறுகோள்கள் பூமியை நோக்கி அதிவேகமாக வந்துகொண்டிருப்பதாகவும் அவை நாளை அதிகாலை பூமியை கடந்து செல்லும் எனவும் தெரிவித்துள்ளது. இவை இரண்டினாலும் பூமிக்கு எந்தவொரு ஆபத்தும் இல்லை என்றும் அதனைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டு ஆஸ்டிராய்டுகளில் மிகப்பெரியதிற்கு ’ஆஸ்டிராய்டு 2024 XY5’ எனப் பெயர் சூட்டப்பட்டுள்ள நிலையில் அது 71 அடி சுற்றளவில் சிறிய ரக விமானத்தின் அளவில் இருக்கக்கூடும் எனவும் ஒரு மணி நேரத்திற்கு 17,389 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி வந்துகொண்டிருப்பதாகவும் அது இந்திய மணிக்கணக்கில் நாளை (டிச.16) காலை 5.56 மணியளவில், பூமியிலிருந்து சுமார் 3,500,000 கி.மீ. தொலைவில் அது கடந்து செல்லக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோளுக்கும் பூமிக்குமான தொலைவானது நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 9 மடங்கு அதிகம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைவிட சற்று சிறிய மற்றொரு சிறுகோளான ’ஆஸ்டிராய்டு XB6’ 56அடி சுற்றளவில் சிறிய வீடு அளவில் இருக்கும் எனவும் இது மணிக்கு 23,787 கி.மீ வேகத்தில் பூமியை நோக்கி பயணித்து வருவதாகவும் இந்திய மணிக்கணக்கில் நாளை காலை 7.25 மணியளவில் பூமியிலிருந்து 6,690,000 கி.மீ. தொலைவில் இது கடக்கக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிறுகோள் நிலவுக்கும் பூமிக்குமான தொலைவை விட 17.4 மடங்கு அதிக தொலைவில் பயணிப்பதால் இதனாலும் பூமிக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாதாரணமாக 150 மீட்டருக்கும் மேல் 4.6 மில்லியன் கி.மீ தொலைவில் பூமியை நோக்கி வரும் சிறுகோள்கள் மட்டுமே அபாயகரமானதாக கருதப்படும். இருப்பினும், முன்னெச்சரிக்கையோடு இருப்பதற்காக செயற்கைக் கோள்கள் மற்றும் ரேடார்கள் உதவியோடு சர்வதேச அளவில் விண்வெளி ஆராய்ச்சி மையங்கள் பூமிக்கு அருகில் வரும் அனைத்து கோள்களையும் தொடர்ந்து கண்காணித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT