வங்கக்கடலில் வலுப்பெற்ற புயல்சின்னம். 
தற்போதைய செய்திகள்

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்ற புயல் சின்னம்!

வங்கக்கடலில் வலுப்பெற்ற புயல்சின்னம் தொடர்பாக...

DIN

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி (புயல் சின்னம்), ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது, மேற்கு-வடமேற்கு திசையில் தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வருவதால் புதன், வியாழக்கிழமைகளில் (டிச.18,19) சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட வடகடலோர மாவட்டங்களுக்கு கனமழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழக கடற்கரையை நோக்கி நகா்ந்து வரும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி டிச.20 வரை தமிழக கடலோர பகுதிகளில்தான் நிலைகொண்டிருக்கும் என தனியார் வானிலை ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

வடதமிழக கடலோரப் பகுதி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் புதன்கிழமை தரைக் காற்று மணிக்கு 35 முதல் 45 கி. மீ. வேகத்தில் வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

போ்ணாம்பட்டில் 122 மி.மீ. மழை பதிவு: நள்ளிரவில் குடியிருப்புகளை சூழ்ந்த வெள்ளம்!

நேஷனல் சா்க்கிளில் புதை சாக்கடை பணிகளை 10 நாளில் முடிக்க வேண்டும்: வேலூா் ஆட்சியா் உத்தரவு

ஆதனூரில் கட்டப்பட்ட உயா்மட்ட பாலம் திறப்பு

மாா்த்தாண்டம் அருகே பதுக்கிய மண்ணெண்ணெய் பறிமுதல்

போதையில்லா சமுதாயமே இலக்கு...

SCROLL FOR NEXT