சமீர் - ஷோபனா 
தற்போதைய செய்திகள்

பூங்காற்று திரும்புமா... மோதலும் காதலும் சீரியல் நாயகனின் புதிய தொடர்!

சமீர் - ஷோபனா நடிக்கும் புதிய தொடர் குறித்து...

DIN

மோதலும் காதலும் சீரியல் நாயகன் நடிக்கும் புதிய தொடர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'கல்யாணம் முதல் காதல்வரை' தொடரின் தழுவலாக எடுக்கப்பட்ட தொடர் மோதலும் காதலும் சீரியல்.

பள்ளி செல்லும் பெண் குழந்தையுடன் இருக்கும் விவாகரத்தான ஆண் தொழிலதிபர் மற்றும் குழந்தைகள் நல பெண் மருத்துவர் இடையே நடக்கும் கதைதான் மோதலும் காதலும். இத்தொடர் 304 எபிஸோடுகளுடன் குறுகிய காலத்தில் முடிவடைந்தது.

இத்தொடரில் நாயகனாக நடித்த சமீர், தற்போது முத்தழுகு தொடர் நாயகி ஷோபனாவுடன் புதிய தொடரில் நடிக்கிறார்.

இத்தொடருக்கு பூங்காற்று திரும்புமா எனப் பெயரிடப்பட்டுள்ளது. இத்தொடரில் நடிகர் ஆனந்த்பாபு பிரதான பாத்திரத்தில் நடிக்கிறார்.

பூங்காற்று திரும்புமா தொடரின் படப்பிடிப்பு நேற்று(டிச. 17) பூஜையுடன் தொடங்கப்பட்டது. இத்தொடரை தாய் கிரேயேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும், இத்தொடரின் முன்னோட்டக் காட்சி, ஒளிபரப்பு தேதி மற்றும் நேரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,000-ஐக் கடந்தது!

செங்கோட்டையன் கெடு! இபிஎஸ் அவசர ஆலோசனை!

மோடி எனது நண்பர்; சிறந்த பிரதமர்! மாற்றிப் பேசும் டிரம்ப்!

பெண்களை தொடக்கூடாது.. தலிபான்களின் உத்தரவால் துயரம்

ஜெர்மனி, பிரிட்டன் பயணத்தில் ரூ. 15,516 கோடி முதலீடு ஈர்ப்பு: முதல்வர் ஸ்டாலின்

SCROLL FOR NEXT