தேனீக்கள் கொட்டியதில் காயமடைந்த மாணவர்களில் ஒருவர்.  
தற்போதைய செய்திகள்

பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயம்!

ஒடிசாவில் பள்ளி நிகழ்ச்சியில் தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்ததைப் பற்றி..

DIN

ஒடிசா மாநிலம் கெந்தரப்பரா மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவின்போது தேனீக்கள் கொட்டியதில் 30 மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.

கெந்தரப்பரா மாவட்டத்தின் ஃபகிராபாத் எனும் கிராமத்திலுள்ள ராமசந்திரா நோடல் உயர்நிலை அரசுப் பள்ளியின் திடலில் நேற்று ஆண்டு விழா நடைப்பெற்றது. அப்போது அருகிலிருந்த மரத்திலிருந்து தேனீக்கூடு ஒன்று கிழே விழுந்ததாக கூறப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து அதிலிருந்த தேனீக்கள் கூட்டமாக அருகில் நடைப்பெற்று கொண்டிருந்த பள்ளி நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களை விரட்டி கொட்டத் துவங்கின.

இதில், அங்கிருந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் என அனைவரும் தப்பித்து ஒடி வகுப்பறைகளில் தஞ்சமடைந்துள்ளனர்.

இருப்பினும், தேனீக்கள் அவர்களை விரட்டிச் சென்று மாணவர்களை பல இடங்களில் கொட்டியுள்ளது.

இதில், 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் படுகாயமடைந்தனர். உடனடியாக அப்பள்ளியின் ஆசிரியர்கள் தேனீ கொட்டிய மாணவர்களை மீட்டு அருகிலிருந்த சுகாதார மையத்தில் அனுமதித்தனர். இதனைத் தொடர்ந்து பள்ளியின் ஆண்டு விழா தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

இந்த குறித்து தகவல் அறிந்து ஒடிசா மாநில கல்வித்துறை அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெரும் மாணவர்களை காண விரைந்தனர்.

இந்நிலையில், படுகாயமடைந்த மாணவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளி மாணவர்கள் பயிலும் இடத்தை முறையாக பராமரிக்காமல் இருப்பதினால் இதுப்போன்ற சம்பவங்கள் நடப்பது தொடர்கதையாகி வருகின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல்லையில் மதுபோதையில் நண்பரைக் கொன்றவர் கைது!

கோவை சுட்டுப் பிடிப்பு சம்பவம்: காவலருக்கு அரிவாள் வெட்டு!

இந்திய கிரிக்கெட் வீராங்கனை தீப்தி சர்மா டிஎஸ்பி-யாக நியமனம்!

புகையிலை இல்லா சமுதாயம் உருவாக்க உறுதிமொழி ஏற்பு

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, புறநகரில் மழை!

SCROLL FOR NEXT