தற்போதைய செய்திகள்

நெல்லை கொலைச் சம்பவம்: 3 தனிப்படைகள் அமைப்பு!

நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக...

DIN

திருநெல்வேலி நீதிமன்றத்துக்கு ஆஜராக வந்தவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலியில் கீழநத்தம் பகுதியைச் சேர்ந்த மாயாண்டி என்பவர் குற்ற வழக்கு தொடர்பாக விசாரணைக்காக, வெள்ளிக்கிழமை (டிச. 20) காலை 10.15 மணிக்கு பாளையங்கோட்டை அருகே உள்ள நீதிமன்றத்தில் ஆஜராக வந்தபோது, காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பல், அவரை வெட்டிப் படுகொலை செய்தனர்.

கடந்த ஆண்டு கீழநத்தம் பஞ்சாயத்து வார்டு உறுப்பினராக இருந்த ராஜாமணி என்பவர் கொலை செய்யப்பட்டதற்கு பழிக்குப்பழியாக மாயாண்டி கொலை செய்யப்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

கொலை செய்யப்பட்ட மாயாண்டி மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதுவரை காரில் வந்த 5 பேர் கொண்ட கும்பலையும், கொலைக்கு சதித்திட்டம் தீட்டிய மேலும் 2 பேரையும் காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்த நிலையில், நெல்லை நீதிமன்ற வளாகத்தில் நடந்த கொலைச் சம்பவம் தொடர்பாக 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

திருநெல்வேலி மாநகரின் முக்கிய இடங்களில் காவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக திருநெல்வேலி மாநகர காவல் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேரிலிண் மன்ரோ லுக்... ஓவியா!

சலம்பல பாடல் புரோமோ!

2-வது போட்டியில் மே.இ.தீவுகள் வெற்றி; சமனில் டி20 தொடர்!

ரசிகர்களின் அன்பை சுயலாபத்துக்காக பயன்படுத்த மாட்டேன்! -நடிகர் அஜித்குமார்

ஊரும் லிரிக்கல் பாடல் வெளியானது!

SCROLL FOR NEXT