கோப்புப் படம் 
தற்போதைய செய்திகள்

கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலி!

மத்தியப் பிரதேச மாநிலத்தின் மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவு இயந்திரத்தில் துப்பட்டா சிக்கி பெண் பலியானதைப் பற்றி...

DIN

மத்தியப் பிரதேசம்: மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்திலுள்ள இயந்திரத்தில் துப்பட்டா சிக்கியதில் கழுத்து நெறிக்கப்பட்டு பெண் ஒருவர் பலியானார்.

உஜ்ஜயின் மாவட்டத்திலுள்ள மஹாகாலேஸ்வர் கோயிலின் உணவுக்கூடத்தில் பக்தர்ககளுக்கு உணவு வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இன்று (டிச.21) அதிகாலை ரஜ்னி காத்ரி (வயது-30) எனும் பெண் சமையல் பணியில் ஈடுப்பட்டிருந்தபோது அங்குள்ள உருளைக்கிழங்கு உரிக்கும் இயந்திரத்தில் அவரது துப்பட்டா சிக்கியது. இதில் கழுத்து நெறிக்கப்பட்டு உயிருக்கு போராடி மயங்கியுள்ளார்.

இதனைக் கண்ட சக ஊழியர்கள் உடனடியாக அந்த இயந்திரத்தை நிறுத்தினார்கள், பின்னர் அவரை அந்த இயந்திரத்திலிருந்து மீட்டு அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த காவல் துறையினர் அவரது உடலை உடற்கூராய்வுக்காக அனுப்பிவைத்தனர். அவர் பணியாற்றிய உணவுக்கூடத்தின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், மாநில அரசின் சார்பில் அவரது குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

SCROLL FOR NEXT