தற்போதைய செய்திகள்

டிச. 26, 27-ல் சென்னை, புறநகரில் மழை!

சென்னை, புறநகரில் மழை தொடர்பாக...

DIN

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் டிச. 26, 27 ஆகிய தேதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு வெதர்மென் பிரதீப் ஜான் தெரிவித்ததாவது:

காற்றழுத்த தாழ்வு மேகக்கூட்டங்கள் வலுக்குறைந்து குறைந்த அளவிலான சுழற்சியைக் கொண்டுள்ளது. இது அடுத்த 2 நாள்களில் வலுவிழக்கும். திரும்பவும் இந்த சுழற்சி கிறிஸ்துமஸ் நேரத்தில் தமிழகப் பகுதிகளில் பயணிக்கும்.

அப்போது டிச. 26, 27 ஆகிய நாள்களில் திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை பெய்யும். அதேபோல், இம்மாவட்டங்களில் கிறிஸ்துமஸ் நாளில்கூட ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

கடந்த இருநாள்களாக நிலையற்றத் தன்மையினால் தமிழகத்தின் மத்திய மாவட்டங்களில் சேலம், திருச்சி, மதுரை, கரூர், விருதுநகர், புதுக்கோட்டை மழை பெய்தது.

இன்றும்கூட சேலம், திருச்சி, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமாநாதபுரம், மதுரை, கிருஷ்ணகிரி, தருமபுரி, பெரம்பலூர் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்யும். ஆச்சரியப்படுத்தும் விதமாக பெங்களூரிலும் மழை பெய்யும்

தற்போது கூறப்பட்டது சில இடங்களில் மழை பெய்வதற்கும், சில இடங்களில் மழை பெய்யாமல் இருப்பதற்கும் வாய்ப்பு உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுக திட்டங்களை காப்பி - பேஸ்ட் செய்கிறார் Stalin: EPS | செய்திகள்: சில வரிகளில் | 15.8.25

செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றினார் பிரதமர் மோடி - புகைப்படங்கள்

தைலாபுரம் தோட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வருகை! ஏன்?

ஹுமாயூன் கல்லறை வளாகத்தில் மேற்கூரை இடிந்து 5 பேர் பலி!

டிரம்ப்பின் வரிவிதிப்பால் அமெரிக்காவுக்கே சிக்கல்! மற்றைய நாடுகளின் கரன்சி மதிப்பு உயர்வு!

SCROLL FOR NEXT