விபத்தில் சிதறிக்கிடக்கும் விமானத்தின் பாகங்கள்  
தற்போதைய செய்திகள்

சிறிய ரக விமானம் விபத்து! 7 பேர் பலி!

மெக்ஸிகோ நாட்டில் சிறிய ரக விமானம் விபத்தில் 7 பேர் பலியானதைப் பற்றி...

DIN

மெக்ஸிகோவின் காட்டுப் பகுதியில் விழுந்து சிறிய ரக விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் 7 பேர் பலியாகினர்.

அந்நாட்டின் மைக்கோகன் மாநிலத்தின் லா பரோடாவிலிருந்து நேற்று (டிச.22) புறப்பட்ட செஸ்னா 207 எனும் சிறிய ரக விமானம், மேற்கு மெகிஸிகோவின் ஜலிஸ்கோ மாநிலத்தின் காட்டுப் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து ஜலிஸ்கோ பொது பாதுகாப்பு துறை அதிகாரிகள் தெரிவித்திருப்பதாவது, விபத்து நிகழ்ந்தது அடர்ந்த காட்டுப்பகுதி என்பதினால் அங்கு சென்றடைவது மிகுந்த சிரமமாக உள்ளதாகவும், அந்த விபத்தினால் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டு, ஆபத்து எதுவும் தொடராமல் இருக்க அவ்விடத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாகவும், அவர்கள் தெரிவித்துனர்.

இந்த விபத்தில் மொத்தம் 7 பேர் பலியானதாக கூறப்படும் நிலையில், அவர்கள் யார் என்று இன்னும் அடையாளம் காணப்படவில்லை.

தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்த பின்னர் பலியானவர்களின் உடல்களை அங்கிருந்து அகற்றப்படவுள்ளது.

அந்த அடர்ந்த காட்டுப்பகுதியில் மேலும் யாராவது இந்த விபத்தினால் பலியாகியுள்ளார்களா என்று விசாரணை மேற்கொண்டு வருவதாகவும், ஜலிஸ்கோ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் 2-வது நாளாக நவீன கருவியுடன் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு

"கரூர் சம்பவத்திற்கு ஒருவர் மட்டுமே பொறுப்பல்ல": நடிகர் அஜித்குமார்

வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை குறைந்தது!

செங்கல்பட்டில் விவசாயிகள் நலன் காக்கும் நாள் கூட்டம்

காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட முருகன் பட்டு கூட்டுறவு விற்பனை நிலையம்

SCROLL FOR NEXT