தற்போதைய செய்திகள்

18 ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மே.இ.தீவுகள்!

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

DIN

18 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

மேற்கிந்தியத் தீவுகள் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இரு அணிகளுக்கும் இடையிலான இந்த டெஸ்ட் தொடர் ஜனவரி 16 ஆம் தேதி முதல் தொடங்குகிறது.

முதல் போட்டி கராச்சியில் ஜனவரி 16 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 20 வரை நடைபெறுகிறது. இரண்டாவது போட்டி முல்தானில் ஜனவரி 24 ஆம் தேதி தொடங்கி ஜனவரி 28 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

கடந்த 2006 ஆம் ஆண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி டெஸ்ட் தொடருக்காக கடைசியாக பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. தற்போது 18 ஆண்டுகளுக்குப் பிறகு, டெஸ்ட் தொடருக்காக மேற்கிந்தியத் தீவுகள் பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது.

பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் அணி விவரம்

கிரைக் பிராத்வெயிட் (கேப்டன்), ஜோஷ்வா டா சில்வா, அலிக் அதனாஸ், கீஸி கார்ட்டி, ஜஸ்டின் கிரீவ்ஸ், காவெம் ஹாட்ஜ், டெவின் இம்லாச், அமிர் ஜாங்கோ, மிக்கில் லூயிஸ், குடகேஷ் மோட்டி, ஆண்டர்சன் பிளிப், கீமர் ரோச், கெவின் சின்க்ளேர், ஜேடன் சீல்ஸ், ஜோமெல் வாரிக்கேன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மலரும் தீயும் வடகிழக்கு இந்தியப் பயணம்

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

SCROLL FOR NEXT