மணிப்பூரில் 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல். 
தற்போதைய செய்திகள்

பாலத்திலிருந்து 3.6 கிலோ வெடி பொருள் கைப்பற்றல்!

மணிப்பூரில் பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடி பொருளை பாதுகாப்புத் துறை கைப்பற்றியதைப் பற்றி...

DIN

மணிப்பூர் மாநிலம் சூராசந்திரப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடி பொருளும் ஆயுதங்களும் பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்டது.

சூராசந்திரப்பூர் மாவட்டம் லெய்சாங் கிராமத்தில் இந்தியப் பாதுகாப்புப் படைகளான அசாம் ரைஃபில்ஸ் மற்றும் மணிப்பூர் மாநில காவல்துறை இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

அப்போது இம்பால்-சூராசந்திரப்பூர் வழியிலுள்ள ஒரு பாலத்தின் அடியிலிருந்து 3.6 கிலோ அளவிலான வெடிபொருளும், அதனை வெடிக்க செய்யக்கூடிய டெடோனேட்டர்களும் மற்றும் சில சாதனங்களும் மீட்கப்பட்டன.

இதுகுறித்து இன்று (டிச.25) ஸ்பியர் கார்ப்ஸ், தங்களது எக்ஸ் தளப்பதிவில் கூறியதாவது, தங்களுக்கு கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில் லெய்சாங் கிராமத்தில் சோதனை மேற்கொண்டதாகவும், அதில் கைப்பற்றப்பட்ட 3.6 கிலோ அளவிலான வெடிபொருளை செயல் இழக்கச் செய்ய நிபுணர்கள் வரவழைக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், மணிப்பூர் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், நேற்று (டிச.24) சூராசந்திரப்பூர் மாவட்டத்தின் மோல்ஜோல் கிராமத்தில் பாதுகாப்புத் துறை மேற்கொண்ட சோதனையில் M16 ரக துப்பாக்கி ஒன்றும், 4 நாட்டுத் துப்பாக்கியும் அதற்கான குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

கோவையில் வெளியிடப்படும் இட்லி கடை டிரைலர்..! எப்போது?

டிரம்ப் வருகைக்கு எதிராக லண்டனில் போராட்டம்!

முதல் டி20: இருவர் அரைசதம் விளாசல்; இங்கிலாந்துக்கு 197 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT