காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் விடிய விடிய நடைபெற்ற சிறப்பு கூட்டுப் பிராா்த்தனை 
தற்போதைய செய்திகள்

காஞ்சிபுரம் தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் வழிபாடு

உலக மக்கள் கொடுமையான நோய்களில் இருந்து விடுபட வேண்டி ஏராளமானோர் விடிய விடிய சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர்.

DIN

காஞ்சிபுரம் தாமல்வாா் தெருவில் அமைந்துள்ள தூய இருதய அன்னை ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் கொடுமையான நோய்களில் இருந்து விடுபட வேண்டி ஏராளமானோர் விடிய விடிய சிறப்பு கூட்டுப் பிராா்த்தனையில் ஈடுபட்டனர்.

உலகம் முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி புதன்கிழமை தமிழகத்தில் உள்ள அனைத்து கிறிஸ்துவ பேராலயங்கள், ஆலயங்களில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்துவர்கள் பிராத்தனையில் ஈடுபட்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி வருகிறார்கள்.

ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய இந்த கிறிஸ்துமஸ் விழா சிறப்பு பிரார்த்தனையில், ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனையில் ஈடுபட்டு வரும் நிலையில், இந்த ஆண்டு நடைபெற்று வரும் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனையில் அதிகளவிலான கிறிஸ்துவர்கள் பெருந்திரளாக தங்களது குடும்பத்தாருடன் உற்சாகத்துடன் பங்கேற்றுள்ளனர்.

இந்த நிலையில், காஞ்சிபுரத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் கலைக்கட்டியுள்ளது. காஞ்சிபுரம் தாமல்வார் தெருவில் தூய இருதய அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்தத் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

இதனைத் தொடா்ந்து உலக நன்மை வேண்டியும், கொடுமையான நோய் உலகை விட்டு அகல வேண்டியும், சகோதரத்துவத்தை வலியுறுத்தியும் சிறப்புக் கூட்டுப் பிரார்த்தனை நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பமாக ஒன்றிணைந்து கலந்துக் கொண்டு இயேசு கிறிஸ்துவிடம் அவர்களது வேண்டுதலை நிறைவேற்றக் கோரி தீவிர பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

மேலும் மனித நேயம், கருணை, அன்பு, சகோதரத்துவம் உள்ளிட்டவைகளை வெளிப்படுத்தும் விதமாகவும் கிறிஸ்துவர்கள் இந்த கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடி மகிழ்ந்தனர்.

மேலும் கிறிஸ்துமஸ் விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டும்,இயேசு பிறப்பை குறிக்கும் வகையில் அழகிய கிறிஸ்துமஸ் குடிலும் அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மிதுன ராசிக்கு மனகுழப்பம் தீரும்: தினப்பலன்கள்!

உற்பத்தித் துறையில் 16 மாதங்கள் காணாத வளா்ச்சி

மாமல்லபுரத்தில் கைவினைப் பொருள்கள் கண்காட்சி

ஆடி வெள்ளி: அம்மன் கோயில்களில் சிறப்பு வழிபாடு

பிளஸ் 2 தோ்ச்சி பெற்ற 80 சதவீத மாணவா்கள் உயா்கல்வியில் சோ்க்கை

SCROLL FOR NEXT