உயிரிழந்த சிறப்பு உதவி ஆய்வாளர் பலராமன் 
தற்போதைய செய்திகள்

தாஜ்புரா அருகே சாலை விபத்தில் காவல் உதவி ஆய்வாளர் பலி

ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் பலியானார்.

DIN

ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் வாழைப்பந்தல் காவல் உதவி ஆய்வாளர் பலராமன் பலியானார்.

வேலூர் மாவட்டம் மோத்தகல் கிராமத்தைச் சேர்ந்தவர் கே.பலராமன்(52). இவர் ராணிப்பேட்டை மாவட்டம் கலவை அடுத்த வாழைப்பந்தல் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக உள்ளார்.

இவர் பணி முடிந்து செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மோட்டார் சைக்கிளில் மோத்தகல் திரும்பிக் கொண்டிருந்தபோது ஆற்காடு ஆரணி சாலை தாஜ்புரா

கிராமம் தனியார் பெட்ரோல் பங்க் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

இதையடுத்து அருகில் இருந்தோர் அவரை ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து ஆற்காடு கிராமிய போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

”கர்வமில்லாத மனிதர் நல்லகண்ணு!” நடிகர் எம்.எஸ். பாஸ்கர் மரியாதை!

கோடிங் டெவலப்பர்கள் பற்றி ஸ்ரீதர் வேம்பு கருத்து!

தஞ்சாவூர் மாவட்டத்துக்கு மார்ச் 2ல் உள்ளூர் விடுமுறை!

ஃபியூச்சர்ஸ் வர்த்தகத்தில் வெள்ளி கிலோவுக்கு ரூ. 3,264 ஆக சரிவு!

கா்நாடக சுகாதாரத் துறையில் மருந்து பற்றாக்குறை: பாஜக விஜயேந்திரா கண்டனம்

SCROLL FOR NEXT