தற்போதைய செய்திகள்

இந்த வாரம் ஓடிடியில் வெளியான படங்கள்!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் படங்கள் குறித்து...

DIN

இந்த வாரம் எந்தெந்த திரைப்படங்கள் எந்தெந்த ஓடிடி தளங்களில் வெளியாகவுள்ளன என்பதைப் பார்க்கலாம்.

விஜய் பிரசாத், சார்லி உள்ளிட்டோர் நடிப்பில் இயக்குநர் அய்யப்பன் சுப்பிரமணி இயக்கத்தில் வெளியான ரூபன் திரைப்படம் டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணக் கிடைக்கிறது.

கண்ணுராமசாமி இயக்கத்தில் சந்தோஷ், ரவீனா ரவி நடிப்பில் வெளியான வட்டார வழக்கு திரைப்படத்தை டெண்ட்கொட்டா ஓடிடி தளத்தில் காணலாம்.

ஹொம்பாலே ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரசாந்த் நீல் கதை எழுதி, சூரி இயக்கிய திரைப்படம் பஹீரா. இப்படத்தில் கன்னட நடிகர் ஸ்ரீமுரளி நாயகனாக நடித்துள்ளார். பஹீரா திரைப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

அறிமுக இயக்குநர் சித்தார்த் விஸ்வநாத் இயக்கத்தில் ஆர்ஜே பாலாஜி நடிப்பில் வெளியான சொர்க்கவாசல் திரைப்படம், நாளை(டிச.27) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

'கயல்' ஆனந்தி பிரதான பாத்திரத்தில் நடித்து வெளியான ஒயிட் ரோஸ் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் நாளை(டிச.27) வெளியாகிறது.

பிரபல கொரியன் இணையத் தொடரான ஸ்குவிட் கேம் இரண்டாம் பாகத்தை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

கார்த்திக் ஆர்யன், த்ரிப்தி திம்ரி, வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான பூல் பலாயா - 3 என்ற ஹிந்தி மொழிப்படம் நாளை(டிச. 27) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமமுகவிற்கான தொகுதி உடன்படிக்கை பாஜக மூலம் நடைபெறும்: டிடிவி தினகரன்

டேவிட் மில்லர், டெவால்ட் பிரேவிஸ் அதிரடி: இந்தியாவுக்கு 188 ரன்கள் இலக்கு!

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

SCROLL FOR NEXT