முகப்பு
தற்போதைய செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,331 கன அடியிலிருந்து 2886 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

Updated On : 27 டிசம்பர், 2024 at 3:13 AM
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு 2886 கன அடியாக அதிகரித்துள்ளது.
பகிர்:

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வெள்ளிக்கிழமை காலை வினாடிக்கு 2,331 கன அடியிலிருந்து 2886 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடி வீதமும், கிழக்கு - மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 300 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.

அணையின் நீர்மட்டம் 119.53 அடியிலிருந்து 119.63 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 92.88 டிஎம்சியாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.