முகப்பு
தற்போதைய செய்திகள்

ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்!

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 6 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதைப் பற்றி..

Updated On : 28 டிசம்பர் 2024, 6:01 pm IST
கோப்புப் படம்
பகிர்:

அஸ்ஸாம் மாநிலத்தில் ரூ. 6 கோடி அளவிலான போதைப் பொருள் பறிமுதல்!

வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் இரு வேறு நடவடிக்கைகளில் ரூ.6 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக அம்மாநில முதல்வர் ஹிமாந்தா பிஸ்வாஸ் சர்மா தெரிவித்துள்ளார்.

அஸ்ஸாம் மாநில பாதுகாப்பு மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட இந்த நடவடிக்கைகளை பற்றி அம்மாநில முதல்வர் தனது எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

முதல் நடவடிக்கையாக குவாஹட்டி மாவட்டத்தின் பல்டான் ப்ஜார் பகுதியிலுள்ள ஒரு தனியார் ஹோட்டலில் சிறப்பு அதிரடி படையினர் நேற்று இரவு மேற்கொண்ட சோதனையின் போது 416 கிராம் அளவிலான ஹெராயின் கைப்பற்றப்பட்டதாகவும் அதன் மதிப்பு சுமார் 2.75 கோடி எனவும் அவர் கூறியுள்ளார்.

இதையும் படிக்க: உணவுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 பேர் படுகாயம்!

இந்நிலையில், அந்த போதைப் பொருளுடன் தொடர்புடைய 4 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து நேற்று இரவு நகோன் மாவட்டத்தில் நடத்தப்பட்ட சோதனையின்போது ரூ.3.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், அதனை வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டதாகவும், அஸ்ஸாம் முதல்வரின் எக்ஸ் தளப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சரியான நேரத்தில் தகுந்த நடவடிக்கை எடுத்த அம்மாநில காவல்துறையினருக்கு அவர் தனது பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments