தற்போதைய செய்திகள்

16 மணி நேர போராட்டம்... ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பலி!

ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் பலி!

DIN

மத்தியப் பிரதேசத்தின் குணா மாவட்டத்தில் 140 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை 16 மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட் நிலையில் அச்சிறுவன் பலியானார்.

குணா மாவட்டத் தலைமையகத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ள ரகோகர் சட்டமன்றத் தொகுதிக்கு உள்பட்ட பிப்லியா கிராமத்தில் சனிக்கிழமை மாலை 5 மணியளவில் சுமித் மீனா என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தார்.

ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணிக்கு ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவனை வெளியே கொண்டு வந்தபோது, சுயநினைவு இல்லாத நிலையில் சிறுவன் இருந்துள்ளார்.

அச்சிறுவனின் உயிரைக் காப்பாற்ற ரகோகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக குணா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சஞ்சீவ் சின்ஹா ​​தெரிவித்தார்.

குணா மாவட்ட தலைமை மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி ராஜ்குமார் ரிஷிஷ்வர் மருத்துவமனையில் செய்தியாளர்களிடம் பேசுகையில் ”சுமித் மீனா இறந்துவிட்டார்” என்று தெரிவித்தார்.

இதையும் படிக்க: தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு!!

சுமார் 140 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் சிறுவன் 39 அடி ஆழத்தில் சிக்கியதாக குணா ஆட்சியர் சதேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

"குளிர்காலம் என்பதால் குறுகிய ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவனின் கைகள் மற்றும் கால்கள் நனைந்தும் வீங்கியும் இருந்தது. அவரது ஆடைகளும் ஈரமாக இருந்தது, வாயில் சேறும் காணப்பட்டது" என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தி கேரளா ஸ்டோரி படத்துக்கு விருது! பினராயி விஜயன் கண்டனம்!

நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர்!

புதிய கல்விக் கொள்கை: கல்லூரிகளில் 12 மணி நேர வகுப்புகள்! கதறும் தில்லி பல்கலை.!!

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

SCROLL FOR NEXT