தற்போதைய செய்திகள்

பாமக பொதுக்குழு விவகாரம்: ராமதாஸை சந்திக்கிறார் அன்புமணி!

பாமக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக...

DIN

பாமக பொதுக்குழுவில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்ட நிலையில் அன்புமணி, ராமதாஸை இன்று(டிச. 29) சந்திக்கிறார்.

புதுச்சேரியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் 2025 புத்தாண்டு சிறப்பு பொதுக்குழுக் கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் தொடர்பாக நிறுவனர் ராமதாஸ் - தலைவர் அன்புமணி இடையே வார்த்தை மோதல் ஏற்பட்டது.

இதனால் பாமக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெரும் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது.

நேற்று நடைபெற்ற பாமக பொதுக்குழுவில், பாமக மாநில இளைஞரணி சங்கத் தலைவராக ராமதாஸ் மகள் வழிப்பேரன் பரசுராமன் முகுந்தனை நியமித்தது தொடர்பாக கூட்ட மேடையில் ராமதாஸ் அறிவித்தார். இதற்கு அன்புமணி மேடையிலேயே கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.

அப்போது, கட்சியில் சேர்ந்து 4 மாதங்களே ஆனவருக்கு பதவி எதற்கு? எனக்கு உதவியாக யாரும் தேவையில்லை என அன்புமணி கூற, முகுந்தன்தான் பாமக இளைஞரணித் தலைவர் என ராமதாஸ் உறுதியாக தெரிவித்ததை அடுத்து மேடையிலேயே மைக்கை தூக்கிப் போட்டார் அன்புமணி.

இதனால் கூட்டத்தில் பரபரப்பு நிலவியது. இளைஞரணித் தலைவர் நியமனத்துக்கு நன்றி தெரிவிக்குமாறு ராமதாஸ் கூறியதும் கெளரவத் தலைவர். ஜி.கே. மணி மைக்கை எடுத்தார்.

அப்போது அவரிடம் மைக்கை கேட்டு வாங்கிய அன்புமணி பனையூரில் எனக்கு அலுவலகம் இருக்கிறது. இனி தொண்டர்கள் அங்கு வந்து என்னை சந்திக்கலாம் என தொலைபேசி எண்ணையும் அறிவித்தார். இது பாமக தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் பாமக தலைவர் அன்புமணி அக்கட்சியின் நிறுவனரும் தந்தையுமான ராமதாஸை இன்று(டிச. 29) சந்திக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநில அளவிலான பயிலரங்கம்: சிக்கண்ணா கல்லூரி மாணவா்கள் 2 போ் தோ்வு

அதிவேகமாகச் செல்லும் தனியாா் பள்ளி, கல்லுரி பேருந்துகள்: அச்சத்தில் வாகன ஓட்டிகள்

முதுமலை வளா்ப்பு யானைகள் முகாமில் விநாயகா் சதுா்த்தி விழா

உதகையில் ட்ரோன் மூலம் சிறுத்தை நடமாட்டம் கண்காணிப்பு

ஓவேலி பகுதியில் காட்டு யானையைப் பிடிக்க தயாா் நிலையில் கும்கி

SCROLL FOR NEXT