தற்போதைய செய்திகள்

தென்கொரியா: விமான விபத்து பலி எண்ணிக்கை 120-ஆக உயர்வு!!

தென்கொரியா விமான விபத்து பலி எண்ணிக்கை உயர்வு.

DIN

தென்கொரியாவில் நடந்த விமான விபத்தின் பலி எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது என்று அந்நாட்டின் தேசிய தீயணைப்பு நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.

தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து ஜெரு ஏர் பிளைட் 2216 என்ற விமானம், 175 பயனிகள் மற்றும் 6 விமான ஊழியர்களுடன் தென் கொரியாவுக்கு சென்ற நிலையில், முவான் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து விலகி விமானம் விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் விமானத்தின் பின்பகுதி தீப்பற்றி எரிந்து பயங்கர புகை கிளம்பியது. விமானத்தில் இருந்து பயணிகள் வெளியேறுவதற்குள்ளாக விமானம் முழுவதும் தீப்பிடிக்க தொடங்கியது.

"இதுவரை இருவர் மீட்கப்பட்டுள்ளனர், 120 பேர் பலியாகியுள்ளனர்" என்று தென்கொரியாவின் தேசிய தீயணைப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானம் பறவைகள் மீது மோதல் மற்றும் வானிலை காரணங்களால் இவ்விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

ஒரு விமானப் பணிப்பெண் மற்றும் ஒரு பயணி இதுவரை மீட்கப்பட்டுள்ளதாக தென் கொரியா தேசிய தீயணைப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. விபத்து நடந்த இடத்திற்கு 32 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் வந்துள்ளனர்.

பயணிகளைக் காப்பாற்ற அனைத்து முயற்சிகளையும் எடுக்குமாறு தென்கொரியா அதிபர் இடைக்கால அழைப்பு விடுத்தார்.

விபத்துக்குள்ளான விமானத்தில் எஞ்சியிருந்த பயணிகள் உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்று தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ராமதாஸை சந்தித்து நலம்விசாரித்தார் நயினார் நாகேந்திரன்!

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

SCROLL FOR NEXT