பாதுகாப்புப் படையினரால் கைப்பற்றப்பட்ட பதுங்கு குழிகள்  பிடிஐ
தற்போதைய செய்திகள்

பதுங்கு குழிகளை அழித்த பாதுகாப்புப் படை!

மணிப்பூரில் பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதைப் பற்றி..

DIN

மணிப்பூர் மாநிலத்தில் பாதுகாப்புப் படை துப்பாக்கி சூடு நடத்தி 4 பதுங்கு குழிகளை அழித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வெள்ளியன்று (டிச.27) தம்னாபோக்பி மற்றும் சன்சாபி கிராமங்களில் மர்ம நபர்கள் திடீரெனத் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் காவல்துரை அதிகாரி ஒருவரும், அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவரும் படுகாயமடைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, கிழக்கு இம்பால் மற்றும் காங்போக்பி ஆகிய 2 மாவட்டங்களிலுள்ள தம்னாபோக்பி மற்றும் சன்சாபி கிராமங்களில் கடந்த இரண்டு நாள்களாக பாதுகாப்புப் படையினர் தீர நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்தனர்.

இதையும் படிக்க: யானைகள் தாக்கியதில் இளைஞர் பலி!

அந்த நடவடிக்கைகளின் தொடர்ச்சியாக பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் அப்பகுதிகளில் பதுங்கியிருந்த பிரிவிணைவாதிகள் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும், அவர்களுக்கு சொந்தமான 4 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டதுடன், அவர்கள் ஆதிக்கம் செலுத்திய மலைகளில் 3 பதுங்கு குழிகள் கைப்பற்றப்பட்டது.

முன்னதாக, மத்திய ரிசர்வ் காவல் படை மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படை இணைந்து மேற்கொண்ட நடவடிக்கைகளில், பிரிவிணைவாதிகளின் கட்டுப்பாட்டில் இருந்த உயோக் சிங் எனும் பகுதி கைப்பற்றப்பட்டது.

கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதம் முதல் மணிப்பூரின் இரண்டு சமூதாயக் குழுக்களுக்கு மத்தியில் நடந்து வரும் மோதல்களில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மனகஷ்டம் நீங்கும் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

சாலையில் நடந்து சென்ற பெண்ணுக்கு பாலியல் தொல்லை: இளைஞா் கைது

இந்திய குடியரசை மதவாத நாடாக மாற்ற பாஜக சூழ்ச்சி: சோனியா காந்தி குற்றச்சாட்டு

மீன் உற்பத்தியில் 103% வளா்ச்சி: மத்திய அமைச்சா் பெருமிதம்

கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி இந்தியா வருகை

SCROLL FOR NEXT