முகப்பு
கோப்புப் படம்
தற்போதைய செய்திகள்

புத்தாண்டு: சென்னையில் பட்டாசு வெடிக்கத் தடை; 19,000 போலீசார் பாதுகாப்பு

புத்தாண்டையொட்டி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகள்...

தற்போதைய செய்திகள்

புத்தாண்டு: சென்னையில் பட்டாசு வெடிக்கத் தடை; 19,000 போலீசார் பாதுகாப்பு

புத்தாண்டையொட்டி சென்னை மாநகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்புகள்...

Updated On : 30 டிசம்பர், 2024 at 10:09 AM
கோப்புப் படம்
பகிர்:

புத்தாண்டையொட்டி சென்னையில் பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னையில் புத்தாண்டையொட்டி அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் தடுக்க பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சென்னை பெருநகர காவல் துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

சென்னையில் புத்தாண்டையொட்டி பொது இடங்கள், குடியிருப்புப் பகுதிகளில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்படுகிறது.

கடற்கரை பகுதிகள், வழிபாட்டுத் தலங்கள், சாலைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பைக் ரேஸைத் தடுப்பதற்காக 30 கண்காணிப்பு சோதனைக் குழுக்கள் அமைக்கப்படவுள்ளன.

நாளை(டிச. 31) மாலை முதல் மக்கள் கடலில் இறங்குவதோ, குளிப்பதோ கூடாது. மெரினா, சாந்தோம், எலியட்ஸ், நீலாங்கரை உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் காவல் ஆளிநர்கள், குதிரைப்படைகள், மணல் ரோந்து வாகனங்கள் மூலமாக போலீசார் கண்காணிப்பில் ஈடுபடவுள்ளனர்.

சென்னையில் 425 இடங்களில் வாகன தணிக்கை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பெண்களின் பாதுகாப்புக்காக 30 சாலை பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனத்தில் காவல்துறையினர் ரோந்து செல்லவுள்ளனர்.

சென்னையில் புத்தாண்டையொட்டி அனைத்து இடங்களிலும் 19,000 காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். 1,500 ஊர்க்காவல் படையினரும் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

நாளை இரவு 9 மணி முதல் இந்த கட்டுப்பாடுகள் அமலுக்கு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →