தற்போதைய செய்திகள்

இந்திய அணியில் சர்ஃபராஸ் கான்: நெகிழ்ச்சியில் குடும்பத்தினர்!

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் சர்ஃபராஸ் கானை அவரது தந்தை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

DIN

இந்திய டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் சர்ஃபராஸ் கானை அவரது தந்தை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்டில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில், தற்போது இரு அணிகளும் தலா 1 வெற்றியுடன் சமநிலையில் உள்ளன.

இந்த நிலையில், ராஜ்கோட்டில் நடைபெறும் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

கே.எல்.ராகுல் போட்டியிலிருந்து விலகிய நிலையில், அவருக்கும் பதிலாக இளம் வீரர் சா்ஃப்ராஸ் கான் களமிறங்கவுள்ளார். ஸ்ரீகா் பரத்துக்கு பதிலாக இளம் வீரா் துருவ் ஜுரெல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இருவருக்கும் இது அறிமுகப் போட்டி.

தந்தையை கட்டியணைக்கும் சர்ஃபராஸ் கான்

ரஞ்சிக் கோப்பையில் அசத்தி வந்த சர்பராஸ் கான் பல வருடங்களாக இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தார். தற்போது கே.எல்.ராகுலுக்கு பதிலாக சர்பராஸ் கான் அணியில் இடம்பிடித்துள்ளார்.

டாஸ் போடுவதற்கு முன்பாக இந்திய அணி சர்பராஸ் கானுக்கு இந்திய அணியின் தொப்பியை கொடுத்தார்கள். பக்கத்தில் இருந்த சர்பராஸ்கானின் தந்தை உணர்ச்சிவசப்பட்டு ஆனந்த கண்ணீர் விடுத்தார். பின்னர் சர்பராஸை கட்டியணைத்து வாழ்த்து தெரிவித்தார்.

இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மே.வங்கத்தில் தரையிறக்க முடியாமல் திரும்பி வந்த பிரதமர் மோடியின் ஹெலிகாப்டர்!

கம்மின்ஸ் - லயன் அசத்தல்: இங்கிலாந்து வெற்றிபெற 228 ரன்கள் தேவை!

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?

கடும் பனிமூட்டம்: தில்லியில் 60-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

ரஷியாவில் இந்திய மாணவர் மாயம்!

SCROLL FOR NEXT