ஃபரூக் அப்துல்லா 
தற்போதைய செய்திகள்

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டி: ஃபரூக் அப்துல்லா

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

DIN

மக்களவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார்.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவருமான ஃபரூக் அப்துல்லா இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

தேசிய மாநாட்டுக் கட்சி எக்கட்சியுடன் கூட்டணியை வைக்காது என்பதையும், மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில் தனித்து போட்டியிடும் என்பதையும் அவர் தெரிவித்தார்.

அப்போது பேசுகையில், "5 மக்களவைத் தொகுதிகளிலும் தேசிய மாநாட்டுக் கட்சி தனித்து போட்டியிட விரும்புகிறது. ஜம்மு - காஷ்மீரில் மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறவுள்ளது.

மெகபூபா முப்தியின் மக்கள் ஜனநாயக கட்சி கூட்டணி வைக்கும் எக்கட்சியுடனும் தேசிய மாநாட்டுக் கட்சி சேராது" என அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தெரியாத நபரிடமிருந்து Friend Request! SCAM-ல் சிக்க வேண்டாம்! | Cyber Shield | Cyber Security

வேலூர்: மலைப் பகுதியில் யானையின் எலும்புக்கூடு கண்டுபிடிப்பு

செங்கோட்டையன் VS இபிஎஸ் | யார் B Team? | ADMK | TTV | Sasikala | OPS

வாழ்வின் பாதை இவ்வுலகம்... கிருத்திகா காம்ரா!

கும்கி - 2 முதல் பாடல்!

SCROLL FOR NEXT