தமிழக வெற்றிக் கழகத்தின் முக்கிய ஆலோசனைக் கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயல அலுவலகத்தில் நாளை(பிப். 19) நடைபெறுகிறது
இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் அறிவிப்பு விடுத்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் உத்தரவின் பேரில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உள்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.
இக்கூட்டம் சென்னை, பனையூரில் உள்ள தலைமை நிலையச் செயல அலுவலகத்தில் நாளை(பிப். 19) காலை 9 மணி அளவில் நடைபெறவுள்ளது.
தவெக மாவட்டத் தலைமை நிர்வாகிகள் இக்கூட்டத்தில் தவறாமல் கலந்துக் கொள்ள வேண்டும் என்று என். ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.