கோப்புப்படம் 
தற்போதைய செய்திகள்

தேர்தல் கூட்டணி: கமல்ஹாசன் இன்று அறிவிப்பு?

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்கவுள்ளார்.

DIN

மக்களவைத் தேர்தல் கூட்டணி குறித்த அறிவிப்பை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளது.

ஓரிரு மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், கட்சிகளுக்கு இடையே கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தைகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசன், இந்த முறை திமுக - காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கெனவே ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸுக்கு ஆதரவளித்த கமல், மக்களவைத் தேர்தலில் காங்கிரஸுக்கு ஒதுக்கப்படும் தொகுதியில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா சென்னையில் இன்று கொண்டாடப்படவுள்ளது. இந்த விழாவின் போது கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக சென்னை விமான நிலையத்தில் கூட்டணி குறித்த செய்தியாளர்கள் கேள்விக்கு, இரண்டு நாள்களில் நல்ல செய்தி வரும் என்று திங்கள்கிழமை கமல் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரதமர் மோடிக்கு ரஷிய அதிபர் பிறந்தநாள் வாழ்த்து!

மோடி பிறந்த நாளுக்கு மெஸ்ஸி பரிசு..! காரணமாக இருந்தவர் யார்?

இரவில் 26 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

140 ஆண்டுகளுக்கு முன் மாயமான பேய்க் கப்பல் கண்டுபிடிப்பு!

அட்லாண்டிக் கடலில் புயலையே காணோம்! ஆய்வாளர்கள் அதிர்ச்சி!

SCROLL FOR NEXT